உயிரிழப்பு தொடர்பில் இங்கிலாந்தில் வெளிவந்த இரகசிய ஆவணம் -கடும் அழுத்தத்தில் பொரிஸ் ஜோன்ஸன்

738shares

இங்கிலாந்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து, கொரோனா பரவலைத் தவிர்க்கும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க இரகசிய ஆவணம் ஒன்று அரசை எச்சரித்துள்ளது.

இங்கிலாந்து அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக் குழுவிடம் (Sage) ஒப்படைக்கப்பட்டுள்ள திகிலூட்டும் இந்த ஆய்வு, கொரோனா தொடர்பில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவிடாமல் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிக அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

அந்த ஆவணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.

அத்துடன், மக்கள் தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படாவிட்டால், இன்னும்

ஓராண்டுக்குள் 26,000 பேர் உயிரிழப்பார்கள் என்ற பயங்கர செய்தியையும் அது தெரிவித்துள்ளது.

மேலும், புற்றுநோய், இரத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பண மதிப்பு வீழ்ச்சி காரணமாக இன்னும் 31,900 பேர் உயிரிழக்கலாம் என்றும் அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!