இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா -விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

629shares

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்றும், அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தற்போது 2-வது அலையாக மீள அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள், அரசு விதித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் சுற்றக்கூடாது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி விடக்கூடாது என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதையடுத்து கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்றும், அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அந்தநாட்டின் உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் கூறும்போது, “கொரோனாவில் இருந்து உயிர்களை காப்பாற்றுவதற்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இங்கிலாந்தில் கொரோனாவால் இதுவரை 42 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 4.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

நாளை முதல் மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

நாளை முதல் மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!