மேற்கு லண்டன் பகுதியில் கடை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் -இருவர் உயிரிழப்பு

651shares

மேற்கு லண்டன் பகுதியில் உள்ள கடை ஒன்றில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த கடையில் எரிவாயு கசிவு ஏற்பட்டே வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றதாகவும் விசேட உபகரணங்கள் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் தேடுதல் இடம்பெறுதாகவும் தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கட்டடத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட ஐவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒரு குழந்தையும் மற்றும் நான்கு வயதானவர்களும் அடங்குவதாகவும் சேத மதிப்பு தொடர்பில் தம்மால் உறுதியான தகவலை தெரிவிக்க இயலாதுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு தலைவரான போல் மோர்கன் இது தொடர்பில் தெரிவிக்கையில்

எங்களது வீரர்கள் விசேட உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநேரத்தில் எம்மால் சொத்திழப்பு தொடர்பில் உறுதியான தகவலை தர முடியாவிட்டாலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.

இந்த இடத்திலிருந்து மக்களை விலகி இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்றும் இது ஒரு வாயு வெடிப்பு என்று நம்பப்படுவதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு கடைக்குள் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்திருப்பதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

லண்டன் அம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில் ஒரு நபருக்கு சிகிச்சை அளித்து விடுவித்ததாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் மற்ற அவசர சேவைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்