இரண்டு குழந்தைகள் கழுத்து அறுத்து கொலை! பெண்ணுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் அதிரடி!

3shares
Image

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றதாக கடந்த 2012 ஆம் ஆண்டு தொடரப்ப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6 வயது மகள் மற்றும் அவளின் இரண்டு வயது தம்பி இருவரும் யோசிலின் ஆர்டிகா என்ற 55 பெண்ணின் பராமரிப்பின் கீழ் இருந்தனர்.

சம்பவம் நடந்த அன்று மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டு குளியலறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

இதையடுத்து, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிசார் ஆர்டிகாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற ஆர்டிகாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`