அமெரிக்காவில் கறுப்பினப் பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு!

  • Shan
  • June 14, 2018
36shares

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக கறுப்பின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சான்பிரான்சிஸ்கோ நகர மேயராக லண்டன் ஃப்ரீட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்ட நகர மேயர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று லண்டன் ப்ரீட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள 15 முக்கியமான நகரங்களில் முதன்மறையாக ஒரு பெண், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லண்டன் ஃப்ரீட், மேயராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பெருமிதமும், தன்னடக்கமும் கொள்வதாக குறிப்பிட்டள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`