துணிச்சலாக செயற்பட்டு கடத்தற் காரனிடமிருந்து தப்பிய பெண்!

17shares

அமெரிக்காவின் Floridaவில், கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண், தன் புத்தி சாதுரியத்தால் கடத்தல்காரனை பொலிசில் சிக்க வைத்திருக்கிறாள்.

சினிமா பாணியில் குற்றவாளியை பொலிசார் கைது செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Caroline Reichle (28) என்னும் பெண்ணை அவளது ஆண் நண்பனான Jeremy Floyd இரண்டு நாட்களாக அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளான்.

இருவருக்கும் இடையே துப்பாக்கியைப் பிடுங்க நடந்த சண்டையின்போது துப்பாக்கி வெடித்திருக்கிறது, இரண்டு குண்டுகள் சுடப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக அவை இரண்டும் சுவரில் பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர் ஒரு வழியாக தனது நாயை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவனை சம்மதிக்க வைத்திருக்கிறாள் Caroline.

மருத்துவமனைக்கு வரும் வழியிலும் அவளை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியிருக்கிறான் Floyd.

ஆனால் ஒரு துண்டுக் காகிதத்தில், “பொலிசை அழையுங்கள், என் ஆண் நண்பன் என்னை அச்சுறுத்துகிறான், அவனிடம் ஒரு துப்பாக்கி உள்ளது, என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்” என்று கிறுக்கிய Caroline, மருத்துவமனைக்கு வந்ததும் அதை ரகசியமாக ஒரு ஊழியரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

உடனடியாக செயலில் இறங்கிய மருத்துவமனை ஊழியர்கள், பொலிசாருக்கு தகவல் அளிக்க, Floyd அமர்ந்திருக்கும் அறைக்குள் அமைதியாக நுழையும் பொலிசார் அவனிடம் துப்பாக்கி இருப்பதாக Caroline தகவல் கொடுத்திருந்ததால், முதலில் அவனது துப்பாக்கியைக் கைப்பற்றிவிட்டு அவனைக் கைது செய்கிறார்கள்.

இந்த காட்சிகள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளன.

Floyd மீது ஆயுதம் வைத்திருந்தது, ஆயுதத்தால் தாக்கியது, கடத்தி வைத்திருந்தது முதலான குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க