அமெரிக்காவை அடித்துப்புரட்டும் புளோரன்ஸ்! 150 கி.மீ வேகத்தில் சூறாவளி!!

  • Prem
  • September 14, 2018
95shares

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்;சப்படும் புளோரன்ஸ்சூறாவளி தற்போது அமெரிக்க கிழக்கு கடலோரப்பகுதிகளில் பலமாக வீசிவருகிறது.

மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிவரும் இந்த சூறாவளி கரோலினாமாநிலத்தை தற்போது தாக்கிவருகின்றது. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மின்இணைப்புகள் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளன. நிலைமை மேலும் மோசமடையுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புளோரன்ஸ் சூறாவளி ஏராளமாக உயிரிழப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கபட்டநிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நலன்புரி முகாங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.தஞ்சமடைந்துள்ளனர்.

முன்னதாக மணிக்கு சுமார் 250 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தசூறாவளியின் வேகம் மணிக்கு 165 கிலோ மீற்றராகக் குறைந்தாலும், அதன் பரப்பளவு அதிகரித்துள்ளதால்கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாமென அஞ்சப்படுகிறது.

10 லட்சம் முதல் 30 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்என்று மின்சார நிறுவனங்கள் கூறியுள்ளன. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கிழக்குக் கடலோரப் பகுதிகளிலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளனஇதனால் 1400க்கும் மேலான விமான சேவைகள் மீளெடுக்கப்பட்டுள்ளன

இதையும் தவறாமல் படிங்க