சொந்த குழந்தைகளையே வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய கொடூரம்! நீதிமன்றிள் அதிரடி தீர்ப்பு!

16shares

அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57) மற்றும் அவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50) இருவருக்கும் 12 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்திரவதை படுத்தி வந்தனர்.

இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வெளியே தப்பி வந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து பொலிசார் வீட்டுக்கு சென்று சிறை வைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளையும் மீட்டனர்.

வீட்டில் அடைத்து வைத்திருந்த குழந்தையின் பெற்றோர் டேவிட் ஆலன் டர்பின், லூயிஸ் அன்னா டர்பின் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சிறை தண்டனை அனுபவித்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையும் தவறாமல் படிங்க