உயிரிழந்த வைத்தியரின் வீட்டில் சோதனை செய்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

124shares
Image

அமெரிக்காவில் வைத்தியர் ஒருவரது வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்த வைத்தியரான உல்ரிச் கிளோபர் என்பவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதால், அவரது மருத்துவ மனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3 ஆம் திகதி உல்ரிச் கிளோபர் உயிர் இழந்தார்.

அதனை தொடர்ந்து, வைத்தியரின் குடும்பத்தார் அவரது சொத்துகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்