கொரோனாவால் நிலை குலையும் வல்லரசு! பீதியில் உலக நாடுகள்

91shares

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 19 ஆயிரத்து 308 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (மூன்றாவது இடம்) உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி