அமெரிக்காவில் நேர்மைக்கு கிடைத்தபரிசு -குவியும் நிதியுதவி

142shares

அமெரிக்காவில் முகக் கவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளரானபெண் ஒருவருக்கு சேவை செய்ய மறுத்த ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியருக்கு 72 லட்ச ரூபாய் அன்பளிப்பாக கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சான் டியாகோ நகரில் உள்ள ஸ்டார் பக்ஸ் கடைக்குச் சென்ற ஏம்பர் லீன் கீல்ஸ் என்னும் பெண், தான் முக கவசம் அணியாமல் சென்றதால் கடை ஊழியர் தனக்கு சேவை அளிக்க மறுத்ததாகக் கூறி, பேஸ் புக்கில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார்.

அடுத்த முறை முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கும் மருத்துவரின் பரிந்துரையோடு அந்த கடைக்குச் செல்லப் போவதாக ஆத்திரத்துடன் அவர் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் ஸ்டார் பக்ஸ் கடையின் ஊழியர் லெனின் குட்டரெஸின் படத்தையும் அவர் இணைத்திருந்தார். இந்நிலையில் ஏம்பர் லீன் எதிர்பார்த்ததற்கு மாறாக லெனினுக்கு பேஸ்புக்கில் ஆதரவு பெருகியது.

கடமையைச் சரியாகச் செய்த லெனினுக்கு டிப்ஸ் கொடுக்க ஆசைப்பட்ட சிலர் அவருக்காக இணையம் வழியாக நிதி திரட்டினர். இதில் தற்போது வரை 72 லட்ச ரூபாய் குவிந்துள்ளது.

அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அந்த பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!