உலகாளும் கனவை தகர்த்தெறிந்த இந்தியா: மிரண்டு போன சீனா!

1475shares

உலகை ஆளும் ஆசையில் இந்தியாவை தேவையில்லாமல் சீண்டிய சீனா தற்போது மிகப் பெரிய சிக்கலை பல்துறைகளிலும் எதிர்கொண்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட மோதல் என்பது 1962 இன் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் ஆகும். தற்போதைய மோதலுக்கு காரணமாக, இந்தியாவின் நிலத்தை அபகரித்து தனது பரந்து விரிந்த தன்மையை அதிகமாக்குவதும், இந்தியாவை ஆசியாவில் வளரவிடாமல் தடுத்து அதன் வலிமையை மட்டுப்படுத்துவதுமாகவே இருந்துள்ளது.

சீனா தற்போது உலகம் நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வல்லரசு நாடாக விரிய முயன்று கொண்டு இருக்கிறது. இத்தனை நாட்களாக அமெரிக்கா செய்து வந்ததை தான் தற்போது சீனாவும் செய்கிறது.

இந்தியாவை சீண்டிய பின் சீனா மூன்று விதமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்த மூன்று விதமான எதிர்ப்புகள் சீனாவின் உலகை ஆளும் கனவை உடைத்து போட்டு இருக்கிறது.

முதலாவதாக உலக அளவில் நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இரண்டாவதாக உலக நாடுகள் சீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடுகளை செய்ய விரும்புகிறது. மூன்றாவதாக உள்நாட்டுக்குள்ளேயே சீனாவிற்கு எதிராக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்து படைகளை அனுப்புகிறது. ஆஸ்திரேலியா சீனா மீது பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கிறது. ஜப்பான் இந்தியாவிற்கு ஆதரவாக கடற்படையை அனுப்பி வருகிறது. இன்னொரு பக்கம் பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறது.

சீனாவில் முதலீடு செய்த அமெரிக்க நாடுகள் எல்லாமே தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

சீனாவின் இராணுவ பலம் உடைந்துள்ள நிலையில், தற்போது பொருளாதர முதலீடுகள் காரணமாக சீனாவின் பொருளாதார பலமும் நொறுங்கி உள்ளது.

இன்னொரு பக்கம் உள்நாட்டு குழப்பம் சீனாவில் ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவிற்கு எதிராக உள்நாட்டு மக்களே கொதித்து எழ தொடங்கி உள்ளனர்.

இந்தியாவை சீண்டியதால், 40 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை இந்தியாவிடம் பறிகொடுத்த காரணத்தால் சீன மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சீன இராணுவமும் அந்நாட்டு அரசு மீது கடும் கோபத்தில் உள்ளது.

அதேபோல் ஹொங்காங் மக்களின் போராட்டம் அது தொடர்பான உலக அழுத்தமும் சீனாவை நிலைகுலைய வைத்து உள்ளது.

இது எல்லாம் சேர்ந்து எப்போது வேண்டுமானாலும் சீனாவின் அதிபர் ஜிங் பிங்கிற்கு எதிரான புரட்சியாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு சீனாவின் உலகை ஆளும் கனவை சிதறடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்