திடீரென பின்வாங்கிய ட்ரம்ப்! தடுமாறும் அமெரிக்க அரசியல்

69shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறிய ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குப்பதிவு நடைபெற்றால் 2020ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றில் மோசடியான தேர்தலாக இருக்கும் எனவும் மக்கள் முறையாகவும், பாதுகாப்பாகவும், வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் எனவும் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நான் தாமதிக்க விரும்பவில்லை. தேர்தலை நடத்தவே விரும்புகிறேன். ஆனால் தேர்தல் முடிவுகளுக்காக 03 மாதங்கள் வரை காத்திருக்க விரும்பவில்லையென அவர் பதில் வழங்கியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தபால் மூல வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கையையும், தேர்தல் முடிவுகளையும் தாமதப்படுத்தும். இது நம் நாட்டுக்கு மிகவும் நியாயமற்றது.

நாம் இதை செய்தால் உலக நாடுகள் நம்மை பார்த்து சிரிக்கும். ஏனென்றால் இது வேலை செய்யாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜனாதிபதி தேர்தல் திகதியில் மாற்றத்தை காண நிச்சயமாக இல்லை. அதே சமயம் நான் ஒரு வக்கிரமான தேர்தலை காண விரும்பவில்லை.

அது நடந்தால் இந்த தேர்தல் வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க சட்டத்தின் படி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை இருப்பினும் ட்ரம்பின் இந்த திடீர் நிலைப்பாடு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்