70 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு நிறைவேற்றப்படவுள்ள தண்டனை

130shares

அமெரிக்காவில் 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 70 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.

லிசா மாண்ட்கோமேரி (43) என்ற பெண் தான் கர்ப்பமடையாதததால், கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட்

(23) என்றகர்ப்பிணிப்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவரது வயிற்றை கிழித்து, அவரது கருவிலிருந்த குழந்தையை திருடிக்கொண்டார்.

திருடிய குழந்தையை தன் வீட்டுக்கு கொண்டு சென்று தன் குழந்தைபோல் காட்டிக்கொண்ட லிசாவை பொலிசார் கைது செய்தனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு பாபி ஜோ கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்டோரியா ஜோ ஸ்டின்னெட் என்ற அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது.

இந்நிலையில், லிசாவுக்கு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.விஷ ஊசி போட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 1953ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசு, பெண்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்கவில்லை.

டிரம்ப் ஆட்சிக்கு வந்தததும் 17 ஆண்டுகளாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தார். ஜூலைக்குப் பின் ஏழு கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இப்போது, 70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்