அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிர்ச்சியளித்த அறிக்கை! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

605shares

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வென்றதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள 16 தேர்தல் சபை வாக்குகளும் ஜோ பைடனின் வெற்றிக் கணக்கில் பதிவாகியுள்ளது.

குறித்த தகவலை மாகாண செயலாளர் Brad Raffensperger உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எஞ்சிய குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் போன்று தாமும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறும் Brad Raffensperger,

மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் எண்கள் பொய் கூறுவது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் சில நேரம், ஒரு தரப்பினரை ஏமாற்றியதாக சிலர் உணரலாம், ஆனால் உண்மையில் எண்கள் தான் வெற்றியை முடிவு செய்கின்றன என்றார்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 306 தேர்தல் சபை வாக்குகளுடனும் ஜனாதிபதி ட்ரம்ப் 232 வாக்குகளுடனும் உள்ளனர்.

ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியாகும் சில மணி நேரம் முன்னர் முக்கிய ஊடகம் ஒன்று ஜோ பைடனுக்கு ஆதரவாக ஜார்ஜியா மக்கள் வாக்களித்திருப்பார்கள் என செய்தி வெளியிட்டது.

இதனிடையே, இரு தினங்களுக்கு முன்னர், தேர்தல் முறைகேடு நடக்கவில்லை என்றால் ஜார்ஜியா மாகாணத்தில் தாம் வென்றிருப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், மறு வாக்கு எண்ணிக்கையிலும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், ஜார்ஜியாவில் நடப்பது ஒரு வேடிக்கை எனவும் காட்டமாக பதிவு செய்திருந்தார்.

ஜார்ஜியாவில் ஜோ பைடன் வென்றிருப்பது, 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறை என தெரிய வந்துள்ளது.

இருப்பினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி - முக்கிய இராணுவ தளபதி கொல்லப்பட்டார்