பதவியிலிருந்து வெளியேறமுன்னர் ட்ரம்ப் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை - அம்பலப்படுத்திய அமெரிக்க ஊடகம்

249shares

ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்கும் முன், அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலை அமெரிக்க ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது..

அமெரிக்காவின் The Hill என்ற ஊடகமே மேற்படி தகவலை அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்த திட்டத்தை நிறைவேற்ற ட்ரம்ப் நிர்வாகம் அவரை வற்புறுத்தி வருவதாக பலரும் The Hill பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்களாம்.

பல நல்ல விடயங்களை தனது பதவிக்காலத்தில் செய்ய வாய்ப்பிருந்தபோதெல்லாம் உருப்படியாக எதையும் செய்யாத ட்ரம்ப் நிர்வாகம், இப்போது ட்ரம்ப் பதவியிலிருந்து இறங்கும் முன் மோசமான விடயங்களை நிறைவேற்றத் துடிக்கிறது.

தற்போதைய சட்டத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தாமாகவே அமெரிக்க குடிமக்களாகிவிடுவார்கள். இந்த திட்டத்தைத்தான் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆணை ஒன்றை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார் ட்ரம்ப்.

சீனாவை குறிவைக்கும் வகையில், H-1B விசா முறையிலும் ட்ரம்ப் நிர்வாகம் மாற்றங்கள் செய்ய இருப்பதாக The Hill தெரிவித்துள்ளது.

அத்துடன், பைடன் பொறுப்பேற்பதற்கு முன், மேலும் மூன்று பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றவும் ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் The Hill மேலும் தெரிவித்துள்ளது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது

இலங்கையை நெருங்கும் சூறாவளி! தரைதொடும் நேரம் வெளியானது