அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அடுத்தடுத்து பேரிடி!

702shares

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் கைப்பற்றிய பென்சில்வேனியா மாகாணத்தில் பதிவான பல இலட்சம் தபால் வாக்குகளை செல்லாதவை என்று அறிவிக்கக்கோரி, அதிபர் ட்ரம்ப் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை அந்த மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் பிரசாரக் குழு முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதி மேத்யூ பிரான் இந்த வழக்கை தள்ளபடி செய்துள்ளார்.

இதனால் அடுத்த வாரம் அந்த மாகாண அரசால் பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் அளிப்பதற்கான வழி உருவாகியுள்ளது.

20 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் ட்ரம்பை விட சுமார் 80,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜோர்ஜா மாகாணம், பைடனின் வெற்றியை சான்றளித்ததன் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மற்றொரு அடியைக் கொடுத்து இருக்கிறது.

இங்கு வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு எண்ணிக்கை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!