ட்ரம்புக்கு தொடரும் சோதனை -பறிக்கப்படுகிறது டுவிட்டர் கணக்கு

131shares

நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதிக்கான அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனால் சமீபத்தில் அவரது டுவிட்டர் பதிவுகள் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதிக்கான அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு தற்போது ட்ரம்ப் உபயோகத்தில் இருந்து வரும் நிலையில் அந்த கணக்கு மீள பெறப்பட்டு அடுத்த ஜனாதிபதியான ஜோபைடனிடம் ஜனவரி 20ம் திகதியன்று ஒப்படைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!