பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

560shares

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த உத்தரவை அடுத்து ஜனவரி 15-ம் திகதிக்குள் சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

ஆபிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின் உள்நாட்டுப் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளித்து வருகின்றன. அல்-கைதா உடன் தொடர்பில் உள்ள அல்-ஷபாப் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் திகதிக்குள் சோமாலியா நாட்டில் உள்ள அமெரிக்கப்படைகள் திரும்பப் பெறப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனினும் இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதத் தேவையில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! மிகுந்த வேதனையில் டக்ளஸ்

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

நிலாவரையில் அகழ்வு மேற்கொண்டவர்கள் இவர்களே! பகிரங்கப்படுத்திய சிவாஜி

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு?  ஹரிகரன்

தன் வினை தன்னைச் சுடும்! பற்ற வைத்த நெருப்பு - சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா அரசு? ஹரிகரன்