இன்று அதிகாரத்தின் இறுதி நாள்! விடைபெறும் முன்னர் இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

928shares

கொரோனா வைரஸ் எங்களை வேறு திசையில் செல்ல கட்டாயப்படுத்தியது. ஆனாலும் கொரோனா தொற்றுக்கு குறைவான காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அமெரிக்க மக்களிடம் வீடியோ மூலம் உரையாற்றினார்.

இதன்போது பேசிய அவர்,

அமெரிக்க நாடாளுமன்றம் மீதான தாக்குதலால் அனைத்து அமெரிக்கர்களும் அச்சமடைந்துள்ளனர். அரசியல் வன்முறை என்பது அமெரிக்கர்களாகிய நாம் மதிக்கும் எல்லாவற்றிற்கும் எதிரான தாக்குதலாகும். அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

சீனா மீது வரலாற்று சிறப்புமிக்க கட்டணங்களை நாங்கள் விதித்தோம். சீனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். எங்கள் வர்த்தக உறவு வேகமாக மாறிக்கொண்டிருந்தது, பில்லியன்கள் மற்றும் பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிற்குள் கொட்டிக் கொண்டிருந்தன.

கொரோனா வைரஸ் எங்களை வேறு திசையில் செல்ல கட்டாயப்படுத்தியது. ஆனாலும் கொரோனா தொற்றுக்கு குறைவான காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

வரும் காலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு வாழ்த்துக்கள். அமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்