பழிக்குப் பழி தீர்ப்போம்! ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல்

141shares

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார்.

காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டவுடன், ட்ரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு ட்ரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.‌

அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.

அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை தாக்க உத்தரவிட்டார். ட்ரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில்‌ கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர் கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்