நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்துடன் பயணிகள் விமானம் மோதியதில் பரபரப்பு!

2shares
Image

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று 222 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் பயணத்தை ஆரம்பித்தது.

அந்த விமானம் ஓடுதளத்தில் பயணத்தை ஆரம்பிக்க தயாராக சென்று கொண்டிருந்தபோது, ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொரு விமானத்துடன் மோதியுள்ளது.

கொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் மோதியது. இதில் துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கை சேதமடைததோடு, தீ பிடித்து எரிந்தது.

இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக தியணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

கொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கபட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
`