நடுவானில் திறந்த விமானத்தின் கதவு! பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி!

8shares
Image

சீனாவின் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று 128 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது.

விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 800 முதல் 900 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் விமானிகள் அறையான ‘காக்பிட்’டில் துணை விமானி இருக்கையின் அருகே கதவு பாதி அளவு திறந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. எனவே காற்றை தடுத்து நிறுத்தும் கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.

அதை தொடர்ந்து அவர் விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விமானத்தை பத்திரமாக தரை இறக்கியுள்ளார். அதன் மூலம் 128 பயணிகளும் உயிர் தப்பினர்.

இதனால் விமான லியூ சிசுயானை பயணிகளும், அதிகாரிகளும் பாராட்டினர். இதற்கு முன்பு இவர் சீன விமான படையில் விமானிகளின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

சிறுமியின் மரணம்;விசாரணை செய்யுமாறு அமைச்சர் உத்தரவு,மூடி மறைக்க பொலீசார் முயற்சி?- நேரடி ரிப்போர்ட்

சிறுமியின் மரணம்;விசாரணை செய்யுமாறு அமைச்சர் உத்தரவு,மூடி மறைக்க பொலீசார் முயற்சி?- நேரடி ரிப்போர்ட்

“அப்பி சுத்தகாறா”!- கொட்டொலிகளுடன் அலைந்த காடையர்கள்!!   கறுப்பு யூலை தடங்கள்…..

“அப்பி சுத்தகாறா”!- கொட்டொலிகளுடன் அலைந்த காடையர்கள்!! கறுப்பு யூலை தடங்கள்…..