குவாத்தாமாலாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி காணாமல் போனோரை தேடும் பணிகள் தீவிரம்!

6shares
Image

குவாத்தாமாலாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த பணிகள் மிகவும் சவால் மிகுந்த உள்ளதாகவும், தற்போது, சடலங்களை கண்டெடுக்கும் பணியாக மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் அமைந்துள்ள பியுகோ எனும் எரிமலை கடந்த 5 ஆம் திகதி திடீரென வெடித்திருந்தது.

இந்த அனர்த்தத்தினால் இதுவரை சுமார் 110 பேர் வரை உயிரிழந்திருக்கலாமென அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

அத்துடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்கள் தெரவித்துள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகளையும் மீட்புப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், காணாமல் போனதாக கருதப்படும் அனைவரும் எரிமலை சாம்பலில் புதையுண்டு இறந்து போயிருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் கருத்த தெரிவித்த போது, தான் கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், எனது குடும்பத்தினரையும் கண்ட பிடிப்பதற்கான வலிமையை தர வேண்டும் என மன்றாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபியூகோ எரிமலை வெடிப்பின் எதிரொலியாக குவாத்தாமாலாவின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குவாத்தமாலாவின் நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`