சிரியாவின் வடகிழக்கு பகுதியில் சிரிய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் பலி!

8shares
Image

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் சிரிய இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஹசாகே மாநிலத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது.

அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களினால் இது வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும். பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹழசாகே மாநிலத்தில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நேற்று இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடந்த 8ஆம் திகதி ரஷ்ய இராணுவத்தினர் நடத்திய விமான தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே தற்போது இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரிய இராணுவத்தினரின் இந்த விமான தாக்குதல் தொடர்பாக ஐ.நா. கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், இட்லிப் மாநிலம் போர் நிறுத்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் நடத்த்ப்பட்டமையானது மிகவும் கொடூரமானது என தெரிவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`