பங்களாதேஷில் பெய்த அடை மழையால் மண்சரிவு! இதுவரை 14 பேர் பலி! பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்!

6shares
Image

பங்களாதேஷில் பெய்த அடை மழையின் தாக்கத்தினால், ஏற்பட்ட மண்சரிவினால், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவமழைக்கு முன்பாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் மியான்மாரைச் சேர்ந்த ரொஹிங்ய அகதிகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமையினால், குறித்த அகதிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பருவகாலத்திற்கு முன்பு பெய்யும் இந்த மழையினால், மியன்மார் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் ரங்கமாதி மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழைக்கு முன்பாக தென்கிழக்கு பங்காளதேசில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் இதுவரை 14 பேர்வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் மியன்மாரிலிருந்து பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பெரும் சிரமங்களையும் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேசில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழைக் காரணமாக மியான்மார் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மியன்மாரில் ரொஹிங்யர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களினால், பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பங்களாதேஷுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால், அவர்களின் தற்காலிக கூடாரங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதனால் சுமார் 1500க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலத்த மழைக்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவினால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாமெகன அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`