அமெரிக்க-வடகொரிய உறவு அறுபதாண்டுகளுக்கு முன்னர் எப்படி தெரியுமா?

  • Shan
  • June 13, 2018
36shares

இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபரை மிகவும் திறமை உள்ளவர் என புகழ்கிறார்.

பதிலுக்கு இந்த சந்திப்பு நிகழக் காரணமாக இருந்த அமெரிக்க அதிபருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என கிம் புகழுகிறார்.

இப்படி ஒருவரையொருவர் புகழ்ந்து பாராட்டும் இரு நாடுகளும் அறுபது ஆண்டுகளுக்குமுன் எப்படி இருந்தன தெரியுமா?

பதிலளிக்கிறது வெளியாகி வைரலாகி வரும் ஒரு காணொளிக்காட்சி.

வட கொரியாவும் தென் கொரியாவும் போரில் ஒருவரை ஒருவர் எதிர்த்தது போக அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் போரில் குதித்தன.

ஒரே மாதத்தில் தென் கொரியாவின் பெரும் பகுதியை வட கொரியா கைப்பற்றியது.

வட கொரியப் படைகளை மேலும் முன்னேற விடாமல் தவிர்க்கும் நடவடிக்கையில் ஐ.நா படைகள் இறங்கின.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் வான்வழி தாக்குதல்கள் வட கொரியப் படைகளை பின் வாங்கும் நிலைமைக்கு ஆளாக்கின.

மூன்றாண்டுகள் நடைபெற்ற இந்தப் போர், ராணுவ வீரர்கள் பொது மக்கள் உட்பட 200,000 பேரை பலி கொண்டது.

வெற்றி தோல்வி எதுவும் இன்றி திடீரென போர் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பகையை முடிவுக்குக் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1994இல் அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் முதல் பில் கிளிண்டன் வரை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வட கொரிய அதிபர் கிம்முடனான அமெரிக்க அதிபரின் சந்திப்பு அமைதியைக் கொண்டு வருமா?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`