யேமனில் இடம்பெற்றுவரும் கடும் தாக்குதல்கள்!

  • Shan
  • June 14, 2018
42shares

யேமனில் கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹுத்தி இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் ஆதரவுடன் யேமன் அரசாங்கம் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் இந்த தாக்குதல்கள் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

யேமன் அரசாங்கத்திற்கும் ஹுத்தி இன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் பல ஆண்டு காலமாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், யேமனில் கிளரச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் ஹுட்டோ துறைமுக நகரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை சவூதி ஆதரவிலான கூட்டணி இராணுவம் ஆரம்பித்துள்ளது.

இந்த தாக்குாலில் தனது நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த தாக்குதலில் ஹுத்தி இன கிளர்சியாளர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹுட்டோ, நகரின் விமானநிலையம் அருகே நடந்துவரும் மோதல் மிகவும் தீவிர நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் யேமனில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தொடர்பில் அவசர கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஐ.நாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க