விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஐரோப்­பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!

128shares
Image

ஐரோப்­பிய ஒன்றியமானது தமி­ழீழ விடு­தலைப் புலி­களை தீவி­ர­வாத அமைப்­பொன்­றாக பட்­டி­யல்­ப­டுத்­து­வதை மேலும் 6 மாதங்­களால் நீடித்­துள்­ளது. தீவி­ர­வாத போராட்டம் தொடர்­பான கண்­ணோட்­டத்தைக் கொண்­டுள்ள தனி­ந­பர்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக வழி­ந­டத்­தப்­படும் குறிப்­பிட்ட கட்­டுப்­பா­டுகள் தொடர்­பான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஒழுங்கு விதி­களின் கீழேயே ஜூலை 30 ஆம் திக­தி­யி­லான இந்தத் தீர்­மானம் எடுக்­கப் பட்­டுள்­ளது.

விடு­தலைப் புலி­களால் இலங்­கைக்கு தொடர்ந்து அச்­சு­றுத்தல் உள்­ளதை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 28 நாடு­க­ளையும் நாம் ஒரு­வாறு ஏற்­றுக்­கொள்ளச் செய்­துள்ளோம் என பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள இலங்­கையின் தூதுவர் ரொடனி பெரேரா தெரி­வித்தார்.

"பல வரு­டங்­க­ளுக்கு முற்­பட்ட தெளி­வாகப் புலப்­ப­டக்­கூ­டிய சான்­று­க­ளுடன் கூடிய புதுப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை நாம் வைத்­தி­ருக்க வேண்­டிய கடி­ன­மான பணி­யாக அது இருந்­தது" என அவர் கூறினார்.

தேவைப்­படும் தக­வல்­களை தொகுக்கும் பணி சட்ட அமு­லாக்கப் பிரி­வாலும் கொழும்­பி­லுள்ள ஏனைய முகவர் நிலை­யங்­க­ளாலும் வெளி­நாட்டு அமைச்சின் மேற்­பார்­வையின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்­டது. எனத் தெரி­வித்த தூதுவர் பெரேரா, " அந்த வகையில் பிர­ஸல்­ஸி­லுள்ள தூத­ரகம் பிரஸல்ஸ் நகரில் ஒழுங்­கு­மு­றையில் கூடும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான நிபு­ணர்­களின் கண்­ணோட்­டங்­க­ளுக்கு அமை­வான சரி­யான முறையை அதி­கா­ரிகள் பின்­பற்­று­வதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தா­கவும் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான தடைகள் தொடர்ந்து பேணப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அனைத்து 28 நாடு­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளு­டனும் ஒழுங்கு முறையில் தான் சந்­திப்பை மேற்­கொண்­ட­தா­கவும் கூறினார்.

ஐரோப்­பிய சபை இந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி விடு­தலைப் புலி­களை முதல் தட­வை­யாக தீவி­ர­வாத பட்­டி­யலில் மீள உள்­வாங்கி தீவி­ர­வாத கண்­ணோட்­டத்தைக் கொண்ட தனி­ந­பர்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக குறிப்­பிட்ட கட்­டுப்­பா­டு­களை தொடர்ந்து விதிக்க வழி­ந­டத்­தி­யி­ருந்­தது.

நீண்ட கால இரா­ஜ­தந்­திர போராட்­ட­மொன்றின் விளை­வாக மீளப் பட்­டி­யல்­ ப­டுத்­தப்­பட்ட 20 அமைப்­புகள் மத்­தியில் விடு­தலைப் புலி­க­ளது பெயர் இடம்­பி­டித்­துள்­ளது.

விடு­தலைப் புலிகள் அமைப்பு 2006 ஆம் ஆண்டில் தீவி­ர­வாத இயக்­க­மாக முதன்­மு­த­லாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு இன்று வரை அவ்­வாறே உள்­ளது. இந்­நி­லையில் அந்தக் குழு­வினர் மேற்­படி ஆரம்ப பட்­டி­ய­லுக்கு எதி­ராக சவால் விடுக்கும் நட­வ­டிக்கை எதிலும் ஈடு­ப­ட­வில்லை. ஆனால் பின்னர் அந்த அமைப்பு இந்த விவ­கா­ரத்தை ஐரோப்­பிய பொது நீதி­மன்­றத்தின் முன்­பாக கொண்டு சென்­றது.

இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு ஐரோப்­பிய பொது நீதி­மன்றம் விடுதலைப் புலிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வலிதற்றதாக்கியிருந்தது. எனினும் அதனை எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கான நிதிகளை முடக்குவதை சாத்தியமாக்கும் வகையில் அது தொடர்பான மேன்முறையீடுகள் தொடர்பான முடிவுகள் வரை பேண அது தீர்மானித்திருந்தது.

இதையும் தவறாமல் படிங்க