ஈரான் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட பொருளாதார தடைகள் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.
ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் விலகிக் கொண்டதை அடுத்தே ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் மீண்டும் அமுலுக்கு வரும் சூழல் ஏற்பட்டது.
முதல் கட்டமாக ஈரானின் வாகனத் தொழிற்துறை மற்றும் அந்நாட்டின் தங்கம் மற்றும் ஏனைய முக்கிய உலோகங்கள் அமெரிக்காவின் தடைக்கு இலக்காகி உள்ளன. அமெரிக்காவின் இரண்டாவது சுற்று தடைகள் வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ளது.
அதன்போது ஈரானின் எண்ணெய்க்கும் தடை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்த தடை அமுலுக்கு வருவதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஐரோப்பாவிடம் இருந்து 5 ஏ.டி.ஆர் 72–600 ரக விமானங்களை ஈரான் வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.