சோயுஸ் வழங்கிய அதியுச்சஅதிர்ச்சி! விண்வெளியில் இருந்து வீழ்ந்த வீரர்கள்!!

262shares

அண்ட வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்ட ரஷ்யாவின் சோயுஸ் உந்துகணையில் (ரொக்கெட்)திடீரென தொழினுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணித்த ரஷ்ய மற்றும் விண்வெளி வீரர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு தரையிறங்கினர்.


தரையிறங்கிய இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். விண்வெளித்துறை வரலாற்றில் இடம்பெற்ற ஒரு பரபரப்பு மிகுந்த திகில் சம்பவமாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது

கஜகஸ்தானில் உள்ள ஏவுகணைத்தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த உந்துகணையில்; ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனினும்; அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக்கும் பயணம் செய்தனர்.

இவர்கள் இருவரும் அண்டவெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 6 மாதகாலம் தங்கும் வகையில் புறப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட கவுண்ட் டவுன் எனப்படும் நேர அட்டவணைப்படி கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு சோயுஸ் புறப்பட்டது.

ஆறு மணி நேரத்தில் இந்த உந்துகணை விண்வெளி நிலையத்தை சென்றடையும் வகையில் இந்த பயணம் இருந்தது

ஆனால் சோயஸ் ஏவப்பட்டபோது உந்துகணையின் பூஸ்டர் பழுத்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறுகாரணமாக அதில் பயணித்த விண்வெளி வீரர்களின் குழுவை அவசரகால வெளியேற்றம் ஊடாக வெளியேற்றபட்டனர்


இவர்களின் குடுவை பேலிஸ்டிக் பொறிமுறை மூலம் புவிக்குத் திரும்பிய பின்னர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டுள்ளனர். இருவரும் நல்ல உடல் நிலையில் உள்ளதாக ரஸ்ய விண்வெளி நிறுவனமும் அமெரிக்க விண்வெளி நிறுவனமாக நாசாவும் தெரிவித்துள்ளது. சோயஸ் உந்துகணையின் வெற்று எரிபொருள் கலங்களை உதிர்க்கும் நடைமுறையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க