விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியும் திகிலும் நிறைந்த செய்தி; நாள்முழுதும் வானில்...!

  • Prem
  • October 12, 2018
102shares

இடைத்தங்கலற்று (நொன் ஸ்ரொப்) மிக நீண்ட தூர பறப்புக்குரிய பயணிகள்விமானசேவையொன்று நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏயார்லைன்ஸின் இந்த 19 மணிநேர பயணம் நியூயோர்க் நகரைநோக்கி சிங்கப்பூர் உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 11.35க்கு ஆரம்பமாகியது.

இடைத்தங்கல்அற்ற இந்தப்பயணத்தின் மூலம் 16 700 ஆயிரம் கிலோ மீற்றர்தூரத்தைஎயார் பஸ்ஸின் புதிய ஏ-350-900 (அல்றா லோங் றேஞ்) ரக விமானம் கடந்து செல்கின்றது.

ஆயினும் இடைத்தங்கலற்ற இந்த 19 மணிநேரப்பயணம் புதிய சவால்களையும் உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பயணிகள் அனைவரும் அதிகநேரம் ஆசனங்களில் அமர்ந்திருக்கவேண்டியநிலைமை முக்கியமாக பிரச்சனையாக நோக்கப்படுகிறது.


இதனால் பயணிகள் விமானத்தினுள்ளே நடந்துதிரிவதை ஊக்குவிப்பதற்காகபயணிகளுக்குரிய நொறுக்குத்தீனிகள் சிப்பந்திகளால் வழங்கப்படமாட்டாது. அதற்கு மாறாகநொறுக்குத்தீனிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பயணிகளே எழுந்து சென்று எடுக்கவேண்டும்.

எந்த நகரிலும் இறங்காமல் ஒரே பயணமாக செல்லும் விமானசேவையை 5 ஆண்டுகளுக்குமுன்னரே சிங்கப்பூர் நியூயோர்க் மார்க்கத்தில் சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் இயங்கியது.ஆனால் இந்தப்பயணத்துக்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பயணிகள் முறையிட்டதையடுத்து இதனைசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்தியது.

மீண்டும் இந்தப்பயணத்தை தற்போது அந்த நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இன்றைய விமானத்தில் வணிகவகுப்பு பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைகள் முழுவதும்பதிவுசெய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் சிக்கன வகுப்பு (எக்கனொமிக் கிளாஸ்) இல்லை.

வணிக வகுப்பு பயணிகளுக்கு சாப்பாடுடன் படுக்கை வசதியும் உண்டு. (மொத்தம்67படுக்கைகள்) முதன்மை சிக்கன வகுப்பில் உணவுவழங்கப்படுகிறது.

வழமையான விமானங்களில் இருப்பதைவிட முன்-பின் ஆசனங்களுக்கு இடையில் 6 அங்குல இடைவெளி அதிகமாக இருக்கும்

இந்த விமானப்பறப்பில் இரண்டு கப்டன்களும் இரண்டு முதல் அதிகாரிகளும்மொத்தம் 13 சிப்பந்திகளும் சேவையில் இருப்பார்கள்.

இதையும் தவறாமல் படிங்க