முகத்தில் ஒத்தடம் கொடுக்க சிறுநீரை பயன்படுத்தும் விசித்திர பெண் கூறும் தகவல்கள்?

56shares
Image

நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீரான சிறுநீரை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீரை குடித்தால், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மீட்டெடுப்பதாகவும், ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு நன்மையளிக்கும். அதனால் அதை முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்.

அதன் பிறகு, சிறுநீர் குடிக்க ஆரம்பித்த கெலீ ஓக்லீ, இப்போது தனது சிறுநீரில் நனைக்கப்பட்ட பருத்தித் துணியால் தனது முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் முகச் சருமம் ‘பளபளப்பாக’ இருப்பதாக நம்புகிறார்.

ஹஷிமோட்டோவின் தைராய்டு நோய் மற்றும் நீண்ட காலமாக வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது, ஆரோக்கிய நன்மைகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சிறுநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 46 வயது லீஹ் சாம்சன் கூறுகிறார். என் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து, உட்கொள்ளும் உணவில் இருந்து சோடியத்தை குறைக்க முடிவு செய்தேன். இதனால், தினமும் காலையில் சிறுநீரை குடிக்கிறேன் என கூறுகிறார்.

சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருளான சிறுநீரை மீண்டும் உடலுக்குள் அனுப்புவது சரியல்ல.

பொதுவாக சிறுநீரகத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அது உடலில் இருக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீர் நச்சாக மாறிவிடும். அதை மீண்டும் உடலில் ஏற்றிக் கொள்வது உடல்ரீதியிலான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.”

யூரோஃபோபியாவால் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்தான் சிறுநீராக உடலில் இருந்து வெளியேறுகிறது

ஆரோக்கியமான உடலின் சிறுநீரில் 95 சதவிகிதம் தண்ணீர் மற்றும் ஐந்து சதவிகித கழிவு உள்ளது. கழிவில் பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கியுள்ளது. இவை உடலில் அதிகமானால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

சிறுநீர் குடிப்பதால் குடலும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க