இசையில் மூழ்கிய 12 பேர் கொலை! அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சித்தாக்குதல்!!

43shares

அமெரிக்காவின் கலிபோர்ணியா நகரில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கித்தாக்குதல் ஒன்றில் காவற்துறை அதிகாரி உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள மதுச்சாலையுடன் கூடிய ஆடல்பாடல்கூடம் ஒன்றில் அதிகாலை இரண்டுமணிக்குப்பின்னர் இடம்பெற்ற குருரமாக தாக்குதலில் தாக்குதலாளியும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் 10 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்றவேளை நடந்தபோது இந்த ஆடல்பாடல்கூடத்தில் கல்லூரிமாணவர்களின் இசை விழா ஒன்று நடைபெற்றதாகவும் அதில் சுமார் 200 பேருக்குமேல் கூடியிருந்தாகவும் கூறப்படுகிறது. தாக்குதலாளி ஒருவர் தாக்குதலை நடத்தியபோது அந்த இடத்துக்குச்சென்ற காவற்துறை அதிகாரி (ஷெரீப்)) ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்

அடுத்த ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த மேற்படி காவற்துறை அதிகாரி பல முறை சுடப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த துப்பாக்கித்தாக்குதல் குறித்து அமெரிக்க அரசதலைவர் டெனால்ட் ரம்ப் கவலைதெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`