400 உயிர்கள் ஆற்றில் பாய்ந்து பலி! சிங்கங்கள் மீதானஅச்சத்தின் அவலம்!!

  • Prem
  • November 08, 2018
159shares

சிங்கக்கூட்டம் ஒன்றின் தாக்குதலுக்கு அஞ்சியோடிய எருமை கூட்டத்தில் இருந்த 400க்கும் எருமைகள் ஒரேயடியாக ஆற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளன.

இந்த அவலச்சம்பவம் பொஸ்வானாவுக்கும் நபியாவுக்கும் இடையில் ஓடும் ஆறு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சுமார் ஆயிரம் எருமைகள் அடங்கிய இந்த எருமைக்கூட்டம் சிங்களைக்கண்டு அஞ்சி ஆற்றில் பாய்ந்தவேளை அவற்றுக்கு இடையில் உருவாகிய அதீத பதற்றமும் நெருக்கடியும் இந்த அவலத்துக்குகாரணமென அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எருமைகள் ஆற்றில் பாய்து பலியானதையடுத்து அருகில் இருந்த கிராமமக்கள் அவற்றில் சிலவற்றின் இறைச்சியை தமது உணவுத்தேவைக்காக வெட்டியெடுத்துச்சென்றனர்.

இதையும் தவறாமல் படிங்க