மெல்பேர்ணில் பயங்கரவாதத்தாக்குதல்! வாகனத்தால் மோதி சரமாரியாக குத்தினார்!!

  • Prem
  • November 09, 2018
80shares

ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ணில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் ஒன்றில் ஒருவர் பலியாகி மூவர் காயமடைந்துள்ளனர்.

தனது வாகனத்தில் வேகமாக வந்த சோமலியபூர்வீகத்தை கொண்ட பயங்கரவாத சந்தேக நபர் தரித்து நின்ற வாகனங்கள் மீது தனது வாகனத்தால் மோதினார். அதன்பின்னர் தனது வாகனத்துக்கு தீ மூட்டிய அவர்அருகில் நின்ற மக்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை நடத்த ஆரம்பித்தார்.

இந்தத்தாக்குதல் குறித்தசெய்தியை அறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் மீதும் அவர்தாக்குதலை நடத்த முயன்றார். இதனையடுத்து தாக்குதலாளி மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட காவற்துறையினர் அவரை மடக்கினது. ஆயினும் மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்.

மெல்பேர்ண் நகரின் பரபரப்பான அங்காடிவீதியில் இடம்பெற்ற இந்தசம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது.கத்திக்குத்துத்தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர் பலியாகிய நிலையில் இன்னொருவரின் நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதாக தீவைக்கபட்ட வாகனத்தில் எரிவாயு உருளைகள் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க