மென்கினை கைது செய்தது அடிப்படை உரிமை மீறல்: விடுதலை செய்யுமாறு கோரும் சீனா!

39shares

ஹுவாவேயின் தலைமை நிதி அதிகாரி - மெங் வான்சோவை கைது செய்தமைக்கான காரணத்தைத் தெளிவு படுத்துமாறு அமெரிக்கா மற்றும் கனடாவை சீனா வலியுறுத்தியுள்ளது.

டிசம்பர் 1 ம் திகதி வான்கூவரில் வைத்து கைது செய்யப்பட்ட சீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் நிறுவனரின் மகளான இவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எதற்காக இவர் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களை அமேரிக்கா வெளியிடவில்லை எனினும் ஈரான் மீதான தடைகளை மீறிய நடவடிக்கையில் ஹூவாவே ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சீனா - மென்கினை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளதோடு அவரது கைதானது அடிப்படை உரிமை மீறல் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க