பல வருடங்களிற்கு பின் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ!

29shares
Image

நியுசீலாந்தின் தென்பகுதியில் நெல்ஸன் நகரிற்கு அன்மையில் சுமார் 6 நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்த காட்டுத்தீயானது மிக மோசமான முறையில் தற்போது செக்பீல்ட் நகர் வரை பரவியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த அனர்த்தத்தை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 3000 பேர் வரை வீடுகளை விட்டு வௌியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கிவருகின்றனர்.

குறித்த இந்த காட்டுத்தீயானது 1955ம் ஆண்டின் பின்னராக ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ என அறியவருகின்றது.

இந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 23 உலங்குவானூர்திகளும் இரண்டு விமானங்களும் ஈடுபட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க