இந்தியா எங்களை அச்சுறுத்துகிறது: ஐ.நாவுக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான்!

115shares

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், "உங்கள் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் ; நமது வீரர்களின் தியாகத்தை வீண்போக விடமாட்டோம்" என இந்திய வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுமென நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார் இந்திய பிரதமர் மோடி.

அதே சமயம், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நேற்றைய தினம் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளராக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார் பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தமது படைகளை பயன்படுத்தும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த காரணத்தினால் இந்த பிராந்தியத்தில் மோசமான சூழல் நிலவுகிறது. ஆகவே, பதற்றத்தை குறைக்க உதவுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எங்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்களும் அதிகப்படியான விலையை கொடுத்தே ஆக வேண்டுமென இந்திய பிரதமர் மோடி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க