இறுதிக்கட்ட உக்கிர சமரின் பின்னர் சரண்! அடுத்து நடக்கப்போவது என்ன?

949shares

சிரியாவில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒரே நாளிள் சரணடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதன் விளைவாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதியான பாக்ஹுஸ்சில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் சிரிய அமெரிக்க கூட்டுப்படைகள் கைப்பற்றி கடுமையான தாக்குதல் நடத்த தீர்மானித்தனர்.

அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய இராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், பாக்ஹுஸ்சில் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து விட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ்.தீரவாதிகள் சிரிய இராணுவ வீரர்களிடம் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்...,

சற்றுமுன்னர் வெடித்தது இறுதிப்போர்; அமெரிக்க ஆதரவுடன் கடும் தாக்குதல்!

இறுதிக்கட்ட சமரின்பின்னர் சரண்; அடுத்து நடக்கப்போவது என்ன?

இதையும் தவறாமல் படிங்க