அரசியல் ஆதாயத்திற்காக எங்கள் மீது வெறுப்பு பிரச்சாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

18shares

அரசியல் ரீதியிலான ஆதாயத்திற்காகவே தங்கள் மீது இந்தியாவில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத இயக்கம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 44 இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய இச்சம்பவத்திற்கு பிறகு எல்லை தாண்டிய தீவிரவாதத்தினை முற்றாக களையெடுப்பதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், ராஜ்ய ரீதியில் தீவிரவாதத்திற்கு ஆதரவளித்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத இயக்கத்தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஐ.நாவில் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மேற்கொண்ட இம்முயற்சியை சீனா தனது வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்தி தடுத்துவிட்டது.

அதே சமயம், தீவிரவாதத்தின் புகலிடமாக உள்ள பாகிஸ்தான் தனது மண்ணை தீவிரவாத செயல்களை மேற்கொள்பவர்களுக்கான இடமாக வைத்திருக்க கூடாதென இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்திவரும் சூழலில், அரசியல் ரீதியிலான ஆதாயத்திற்காகவே தங்கள் மீது இந்தியாவில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அசாதார சூழல்களுக்கு இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலே காரணமெனவும் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க