நியூசிலாந்து துப்பாக்கி பிரயோகம்! இலங்கையர்களுக்கும் பாதிப்பா? உடனடி விசாரணைகளுக்கு நடவடிக்கை!

343shares

நியுசிலாந்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த திடீர் அனர்த்தத்தின்போது பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷ் கிரிகெட் வீரர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

நியூசிலாந்தின் Christchurch பகுதியிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலினுள் கறுப்பு நிற ஆடையுடன் நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்தோர்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

ஆகவே நியுசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை பிரஜகைள் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க