நியூசிலாந்து படுகொலை; தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!

653shares

நியூசிலாந்தின் - கிரிஸ்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 48 பேர் காயமடைந்துள்ள நிலையில், அதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில், அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க