நைஜீரியாவில் பாடசாலையில் நடந்த கொடூரம்! கர்ப்பிணி உட்பட மாணவர்கள் 18பேர் பலி!!

  • Jesi
  • March 15, 2019
39shares

நைஜீரியாவில் லாகோஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கட்டிடம் இடிந்து விழுத்தில் 18 மாணவர்கள் பலியான சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின், 4-வது தளத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டிடத்தின் மற்ற தளங்களில் மக்கள் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று காலை திடீரென அந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மாணவர்களின் அலறல் சத்தம் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும்பொலிஸார், மீட்பு குழுவினர் என அனைவரும் தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

இந்த கோர சம்பவத்தில் 12 மாணவர்கள், பள்ளியின் உரிமையாளர், ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுமார் 60 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மீட்புப்பணிகள் நேற்று முடிவடைந்த நிலையில், இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் சேதமடைந்த கட்டிடமாக அடையாளம் காணப்பட்டு இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்ததாக மாகாண கட்டிட கட்டுப்பாடு முகாமை கூறியுள்ளது.

இச்சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க