உலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு!

967shares

மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார்.

இந்நிலையில் நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்த நிலையில்,

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதே சமயம் எந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க