மற்றுமோர் பள்ளிவாசலுக்கருகில் பாரிய குண்டுத்தாக்குதல்! 7குழந்தைகள் உட்பட பலர் பலி! நூற்றுக்கும் மேற்பட்டோர் அபாய நிலை!

1792shares

யேமனில் நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 07 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது..

யேமன் தலைநகர் சனாவில் உள்ள கிடங்கொன்றிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் இருந்த 07 குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பள்ளிவாசலொன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது 13 பேர் பலியாகியதாகவும் மேலும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் சனா, 2014இலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால் அப்பகுதி அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினால் மூடப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில், நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கூட்டுப்படைகளின் சதியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னணியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு இதுவரை எவ்வித அமைப்புக்களும் உரிமை கோரவில்லை.

ஈரானிய பிணைப்பு கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து 2015லிருந்து சவுதி கூட்டுப் படை தொடர் தாக்குதலை நடத்திவருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க