சற்றுமுன்னர் உலகின் முக்கிய புள்ளி அதிரடிக் கைது! பரபரப்பில் சர்வதேச ஊடகங்கள்!!

  • Shan
  • April 11, 2019
797shares

விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனரான ஜூலியன் அசாங்கே சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுளார்.

இவர் பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்திருந்த அசாங்கே ஏழு ஆண்டுகளின் பின் கைதுசெய்யப்பட்டதாக பிரிட்டன் பொலிஸார் கூறுகின்றனர்.

அசாங்கே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தார்.

இதனால் இவரைக் கைதுசெய்வதாக அமெரிக்கா அறிவித்தது. எனினும் லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அசாங்கே தஞ்சமடைந்திருந்தார்.

இந்த நிலையில் ஈக்குவடோர் அரசு அசாங்கேக்கு தனது நாட்டு குடியுரிமை வழங்கவிருப்பதாக அறிவித்தது. எனினும் அந்த அறிவிப்பினை ஈக்குவடோர் ஜனாதிபதி லெனின் மொரினோ வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து அசாங்கேவைக் கைதுசெய்த பிரிட்டன் பொலிஸார் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதையும் தவறாமல் படிங்க