அதிர்வலையான செயற்பாடுகளை மூடி மறைக்கும் உலக நாடுகள் -'காட்டிக்கொடுத்த' புகைப்படங்கள்..!

68shares

உலக நாடுகள் பலவும் பார்ப்பதற்கு தான் சமாதான சிரிப்போடும், வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டும் திரிகின்றன. ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நடக்கும் பல ரகசியமான சோதனைகளையும், அதிர்வலைகளை கிளப்பக்கூடிய விடயங்களை 'அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்பது போல்' மூடி மறைக்கத்தான் செய்கின்றன என்பதுதான் நிதர்சனம்..!

ஆனால், எல்லா விடயங்களையும் மறைத்து விட முடியாது. ஏனெனில் மேலே ஒரு சக்தி எம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி கடவுள் அல்ல. தொழில்நுட்ப சக்தி, அதாவது - சற்றலைற்கள்..! ஆம், விண்ணில் மிதந்து கொண்டு சற்றலைற்கள் எடுத்த பல படங்கள் உலக நாடுகள் பலவும் மறைத்த, இன்றும் மறைத்துக்கொண்டே இருக்கும் பல விடயங்களை அம்பலப்படுத்துகின்றன அவற்றை இங்கே காணலாம்......

சிரியா :

சிரியாவில் ரோமானிய கால கோவில் ஒன்று முழுமையாக அழிக்கப்பட்டதற்கான சாட்சி..

சீனா :

மிஸ்சீப் ரீப் தீவு, சீனாவால் ஆக்கிரமிக்கப்படுகிறது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதற்கான சாட்சி..!

நைஜீரியா :

குறிப்பிட்ட நிலப்பகுதி மொத்தமாய் அழிந்து கிடப்பதை காட்டும் இந்த செயற்கைகோள் புகைப்படம், வடகிழக்கு நைஜீரியாவில் மாபெரும் படுகொலை நடத்தப்பட்டிருப்பதற்கான சாட்சியாகும்..!

வடகொரியா :

ஜனவரி 5, 2006-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வடகொரியாவின் வெடிகுண்டுகள் தயாரிக்கும் ரகசிய அணுஉலை, கண்டுபிடிக்கப்பட்ட பின் 2007-ஆம் ஆண்டு உலக நாடுகளிடம் 50,000 தொன் கனமான எரிபொருள் எண்ணெய் வாங்கி கொண்டபின் மூடப்பட்டது..!

வடகொரியா :

நவம்பர் 23, 2012, இந்த செயற்கைகோள் புகைப்படத்தை ஆய்வு செய்த டிஜிட்டல்க்ளோப் நிறுவனம் வடகொரியா ஏவுகணையை செலுத்த திட்டமிடுகிறது என்பதை உறுதி செய்தது.

துருக்கி :

துருக்கி - சிரியா எல்லையில் தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான சிரியர்களின் கார்கள்..!

ஈரான் :

செப்ரெம்பர் 9, 2011 அன்றும் மற்றும் நவம்பர் 21, 2011 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் ஈரானில் உள்ள பிட் காணே நகரில் உள்ள ராணுவத்தளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது..!

ஈராக்

ஏப்ரல் 2013, பாக்தாத் நகரில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை விமான தாக்குதலில் கருகிய நிலையில் இருப்பதை காட்டும் செயற்கைகோள் புகைப்படம்..!


ஈரான் :

செப்ரெம்பர் 2009, இது ஈரானின் ரகசிய அணு எரிபொருள் தயாரிப்பு ஆலை என்று நம்பப்படுகிறது..!

இஸ்ரேல் :

ஓகஸ்ட் 5, 2007 அன்றும், ஒக்டோபர் 24, 2007 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கை கோள் புகைப்படங்கள் சிரியாவின் ரகசிய அணுஉலையை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தற்கான சாட்சியாக நம்பப்படுகிறது..!

சீனா :

அணு ஆயுதம் சார்ந்த கப்பல்களுக்கான சீனாவின் ஹைனான் தீவில் உள்ள மலைக்கு அடியில், குகைப்பாதையில் உள்ள ரகசிய துறைமுகம்..!

ரஷ்யா :

ஏப்ரல் 2014, உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் தயாராக நிற்கும் ரஷ்யாவின் அதிநவீன போர் விமானங்கள்..!

சீனா :

டிசம்பர் 14, 2011 அன்று சீனா, தன் மிகப் பெரிய விமானந் தாங்கி கப்பலான 'வர் யாக்'கை மஞ்சள் கடலில் இரண்டாவது முறை சோதனை ஓட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம்..!

வடகொரியா:

வடகொரியாவின் ஏவுகணை செலுத்தும் தளம்..!

சிரியா :

செப்டம்பர் 28, 2012 அன்றும் மற்றும் ஒக்டோபர் 13, 2012 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள், சிரியாவின் ஹமா நகரில் உள்ள லட்சக்கணக்கான குடியிருப்புகள் புல்டோசர்கள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டதற்கான ஆதாரம்..!

ஜப்பான்

பயங்கரமான நிலநடுக்கம் அதைத் தொடர்ந்து வந்த சுனாமியின் போது - பூக்கிஷிமா அணு உலையின் நிலை..!

இலங்கை :

2004 டிசம்பர் 26-ஆம் திகதி காலை 6.28 மணிக்கு இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள்..!

இந்தோனேஷியா :

டிசம்பர் 26, 2004 சுனாமிக்கு முன்னும் பின்னும் : இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள பண்டா ஏஸ் (Banda Aceh).

இத்தாலி

இத்தாலி நாட்டின் கிக்லியோ (Giglio) கடற்கரையில் கோஸ்ட்டா கோன்கோர்டியா (Costa Concordia) சொகுசு கப்பல் ஜனவரி 17, 2012 : கவிழ்ந்து மூழ்கி கொண்டிருக்கும் போது..!

இதையும் தவறாமல் படிங்க