ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல்! 70 தொன் வரை ஆச்சரியமூட்டும் பொருட்கள்

  • Jesi
  • April 15, 2019
69shares

பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் மூழ்கிய கப்பலில் இருந்து சிதைந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

5ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கப்பல் சரக்குக் கப்பலாக பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தக் கப்பலில் இருந்து ஏராளமான பூச்சாடிகள், கோப்பைகள் மற்றும் குவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பண்டைய ரோமானிய சாம்ராஜ்யத்தில் கட்டமைக்கப்பட்டதாக நம்பப்படும் இந்தக் கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சுமார் 70 தொன் வரை எடை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்தப் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக மாற்றுவது குறித்து கிரீஸ் அரசு பரிசீலித்து வருகிறது.

இதையும் தவறாமல் படிங்க