நானூறுக்கும் மேற்பட்ட வீரர்களை தோற்கடித்த இராட்சத நெருப்பு! பிந்திக் கிடைத்த தகவல்!

  • Shan
  • April 16, 2019
564shares

பிரான்ஸ் தலைநகரில் உள்ள 850 வருடங்கள் பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அந்த தேவாலயத்தின் கட்டமைப்பு வலுவிழக்கும் நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பல மணித்தியாலங்களின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் அந்த தீ பெரும் பலத்துடன் பரவுவதைத் தடுக்க முடியவில்லை எனவும், தேவாலயத்தைக் காப்பாற்றுவது முடியாத காரியமாக உள்ளது எனவும், பாரிஸ் தீயணைப்புப் படையின் தளபதி ஜெனரல் Jean-Claude Gallet தெரிவித்துள்ளார்.

அத்துடன் 'தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது' எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சியிலும், விபத்திலும் யாரும் காயமடையவில்லை எனவும், இவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதேவேளை தேவாலயத்தின் பிரதான சின்னமாக கருதப்படும் உயராமான 63 மீற்றர் நீளமான கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடியபோதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது. எனினும், தேவாலயத்தின் மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தனது கவலையினைப் பகிர்கையில், 400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டும், தீ அவர்களை வெற்றி கண்டுள்ளது. இது மிகவும் மிகமோசமான சோக நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

தீ விபத்தைத் தொடர்ந்து மிகப்பழைமை வாய்ந்த பேராலயத்தின் கட்டமைப்பு வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தேவாலயத்தின் உட்புறத்திலுள்ள கலை வேலைப்பாடுகள் அழிந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த தீயினை அணைக்க விமானங்கள் பயன்படுத்தில்லை என கருத்துக்கள் வெளியானது. இதற்கு காரணம் தீ அணைக்கும் canadairs வகை விமானங்கள், பெரும் காட்டுத் தீயை அணைப்பதற்கே பயன்படுத்தப்படும்.

இவை 3 தொன்னிலிருந்து 10 தொன் எடை அளவிலான, நீரை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கீழே கொட்டக் கூடியது. இது ஒரு கட்டத்தின் மீது கொட்டப்பட்டால் அந்தக் கட்டடம் அதனாலேயெ இடிந்து வீழந்து விடும் அபாயம் உள்ளது. இது பெரும் ஆபத்து என்பதாலேயே, இன்று இது பயன்படுத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க